ஏங்கி ஏங்கி
காத்திருந்த நேரத்து,
எதிர்பாராத மழைதுளிகளாய்
ஒன்றிரண்டு முத்தங்கள்..
உறங்கப்போகும்
உயிரை உசுப்பி எழுப்ப...
Wednesday, October 31, 2007
எழுப்ப வா....
Posted by
ரமேஷ்
at
2:05 AM
0
comments
Thursday, October 25, 2007
ஆபத்துதவி...
அழையாமல் வந்த விருந்தாளி போல்,
திடீரென பொத்துக்கொள்ளும் வானம்..
அப்போதெல்லாம்
தலை காக்க கவசமாய்,
ஓரத்தில் மாட்டு சானம்
ஒட்டிக்கொண்டிருக்கும் தவிட்டு சாக்கு,
கொங்கானியாய் மாறி...
Posted by
ரமேஷ்
at
9:02 PM
0
comments
Tuesday, October 16, 2007
நம் காதலின் பரிதவிப்பு..
நீ என்னை பார்க்கும் போது,
நான் உன்னை பார்த்துவிடுவேனோ
என்ற உன் பரிதவிப்பிலும்,
நான் உன்னை பார்க்கும் போது,
நீ என்னை பார்த்துவிடுவாயோ
என்ற என் பரிதவிப்பிலும்,
நம் காதல் பரிதாபமாய் பரிதவிக்கிறது...
Posted by
ரமேஷ்
at
1:48 AM
0
comments
Thursday, October 11, 2007
பாரபட்சம் பாராமல்
முதலில்
நான் தான் நனைவேன்,
முதலில்
நான் தான் நனைவேன்,
என்று சண்டை போடும் மழலைகளாய்
நாமிருவர்..
பாரபட்சம் பாராமல்
தெப்பல் தெப்பலாய்
நம்மை நனைக்கத்தான் போகிறது
இந்த காதல் மழை...
Posted by
ரமேஷ்
at
10:36 PM
0
comments
Tuesday, October 9, 2007
காலம் முழுவதும்..
கரும்மை
பூசிக்கொண்ட எத்தனையோ
இரவுகளை கடந்திருக்கிறேன்..
ஆனால்...
உன்
விழியின் துளி
கருமையில் கட்டுண்டு கிடக்கிறேன்
காலம் முழுவதும்..
Posted by
ரமேஷ்
at
10:00 PM
0
comments
Tuesday, October 2, 2007
எங்கள் முதல் ரயில் பயணத்தில்..
உருகியுருகி
ரசித்த கவிதைகளை முடிக்காமல்,
உன்னிடம் நான் தந்தது...
கவிகள் வாசிக்கும் கவிதையை
நான் வாசிக்க!!!
Posted by
ரமேஷ்
at
9:32 PM
0
comments